Showing posts with label kavithai. Show all posts
Showing posts with label kavithai. Show all posts

Monday, 6 July 2009

காதல் கவிதை

ஞாபகம்
-----------------
தென்றல் என்னை தொட்டுச் செல்லும் போது
உன் சுவாசம் என்னை தொட்ட ஞாபகம்!

முகிலுல் மறைந்து வெண்ணிலவு என்னை காணும் போது
உன் ஓரக்கண் கல்ல பார்வை ஞாபகம்!

சாலையோர செவ்வந்தி மரம் என் மீது பூ தெறிக்கும் போது
உன் முத்த மழையில் நனைந்த ஞாபகம்!

காலைக் கதிர் ஒளி என் மீது படியும் போது
உன் நிழல் ஏந்தி உன் பின்னே நடந்த ஞாபகம்!



ஆசை
-------------------
கண்களுக்குள் உன் பிம்பங்களை வைத்திட
பிறகு விழிகளைத் தைத்திட
ஆசை!

காதுகளில் உன் பெயரினை பொழிந்திட
பிறகு அவற்றை மூடிட
ஆசை!

நெஞ்சுக்குள் உன் நினைவினை நிரப்பிட
பிறகு கனவினில் தவழ்ந்திட
ஆசை!

இதழ்களால் உன் முகத்தினை நனைத்திட
பிறகு உன் மடியில் சரிந்திட
ஆசை!!!



காதல் கருவறை
--------------------------------
தாயின் கருவறையில் விழுந்த உயிர்த்துளியாய்,
உன் காதல் கருவறையில் நான் விழுந்தேன்!
ஈரைந்து மாதங்களில் பெற்றெடுக்க,
நான் சாதாரண குழந்தை அல்ல!
ஆயிரம் யுகங்கள் ஆனாலும்,
உன்னுள்ளே தரித்து, வாழ்ந்து, மறித்து போகும்
உன் அசாதாரண காதலி!



ஆசைகள் கோடி
--------------------
உன் தோளினில் சாய்ந்திட,
மழையினை ரசித்திட ஆசை!

உன் கையினைப் பற்றிட,
நீண்ட சாலையில் நடந்திட ஆசை!

உன் மார்மீது புதைந்திட,
ஒரு போர்வைக்குள் இருவரும் உறங்கிட ஆசை!

உன் அருகில் அமர்ந்திட,
தேநீரின் இறுதி துளிவரை பகிர்ந்திட ஆசை!

உன் கண்களை கண்டிட,
நம் காதல் கதைகளை நினைவுக்கூர ஆசை!

உன் சங்கதிகளைக் கேட்டிட
இரவு உணவு அருந்திட ஆசை!

உன் மீது சாய்ந்திட,
முற்றத்து ஊஞ்சலில் கண்மூடி ஆடிட ஆசை!

உன் பின்னால் நடந்திட,
கோவில் சென்று உனக்காக வேண்டிட ஆசை!

ஆசைகளோ கோடானுகோடி,
உன்னிடம் நான் உரைத்தோ அவற்றுள் ஒரு துளி!!!




காத்திருக்கிறேன்
-------------------------
தொலைவில் கேட்கும்
தபால்காரனின் சைக்கிள் ஒலி,
அவன் கொண்டு வரும் தபால் அனைத்தும்
எனக்கென்று தோன்றும்.
ஆனால்,
ஒன்று கூட எனக்கில்லை!

ஒரு நாளைக்கு ஒரு முறை
வந்து செல்லும் சீமை ரயில்,
இன்று நிச்சயம் நீ வருவாய்
என்று தோன்றும்.
ஆனால்,
இன்றும் நீ வரவில்லை!

அமைதியாய் தூங்கும்
என் வீட்டு தொலைபேசி,
கோவில்மணி ஓசை கூட தொலைபேசி அழைப்பு
என்று தோன்றும்.
ஆனால்,
மௌனத்தை போர்த்திஇருக்கும் தொலைபேசி!

திங்கள் ஒரு முறை உன்
ஊருக்கு வரும் என் தெரு அன்பர்கள்,
இந்த முறை உன் தூது வரும்
என்று தோன்றும்.
ஆனால்,
ஒரு சொல்கூட தூதில்லை!